வான்வெளியில் மிரட்டும் மர்ம வளையங்கள்! வேற்றுக்கிரகவாசிகளின் ஆபத்தான செயற்படா?

248

வான்வெளியில் தோன்றும் கறுப்பு நிற வளையங்கள் கோட்பாடுகளுக்கமைய வேற்றுகிரகவாசிகளின் தளங்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாறு தோன்றும் கறுப்பு நிற வளையங்களை உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வானில் தோன்றும் பாரியளவிலான விசித்திர கறுப்பு வளையங்கள் புகை சுழல் என்று அழைக்கப்படுகின்றன. இவை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட அடிகளாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த விசித்திரமான ‘புகை சுழல்’ Yorkshire நகரத்தில் Birkenshawவிற்கு அருகிலுள்ள M62 என்ற பகுதிக்கு மேலுள்ள வான்பகுதியில் தென்பட்டுள்ளது.

கடந்தாண்டு கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்டிற்கு மேலே ஒரு கறுப்பு வளையம் தென்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் கஸகஸ்தானில் தெளிவான வானத்தில் 320 அடி அகலத்தில் கறுப்பு வளையம் தென்பட்டுள்ளது.

ஆனால் சமீபத்திய கறுப்பு வளையங்கள் Yorkshire நகரத்தின் போர்க்கால நிகழ்வின் பீரங்கித் தீயின் துணை தயாரிப்பு என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் Yorkshire நகரில் Birkenshawவிற்கு அருகிலுள்ள வான்பகுதியில் ‘புகை சுழல்’ தென்பட்டுள்ளது.

22 வயதான இளைஞர் ஒருவர் தனது தொலைபேசியில் இந்த கறுப்பு வளையங்களை புகைப்படம் எடுத்துள்ளார்.

எனினும் Yorkshire நகரத்தில் எவ்வித தீ சம்பவங்களும் பதிவாகவில்லை என அந்த பகுதி தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று வானில் புகை வளையங்கள் தோன்றுவது மிகவும் அதிர்ச்சியும் அசாதாரணமான சம்பவங்கள் என உலகம் முழுவதும் வானில் தோன்றும் மர்மங்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நைஜல் வாட்சன் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது போர்க்கால நிகழ்வினால் ஏற்பட்ட கறுப்பு வளையங்கள் அல்ல எனவும் இது வேற்று கிரகவாசிகளினால் ஏற்படுத்தப்பட்டதெனவும் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE