வாயு சிலிண்டர்கள் விழுந்து பெண் படுகாயம்

270
1416399608-9285

கொடகவல-பலவின்ன பிரதேசத்தில் வாயு சிலிண்டர்கள் வீழ்ந்ததினால் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கொடகவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சப்புகஸ்கந்தையில் இருந்து அம்பலாந்தொட்டை நோக்கி வாயுசிலிண்டர்கள் லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட போது குறித்த லொறியிலிருந்து வாயு சிலிண்டர்கள் திடீரென விழுந்துள்ளன. இதன்போது பாதையில் பயணித்த குறித்த பெண் படுகாமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் படுகாயமடைந்த பெண் கொடகவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவத்தினை அடுத்து லொறியின் சாரதி கொடகவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE