வாரத்தில் 39 மணி நேரத்திற்கு அதிகமாக பணியா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்

172

இன்றைய நாட்களில் நிறுவனங்களுக்கு இடையே காணப்படும் போட்டிகள் காரணமாக பணியாளர்கள் அதிகம் உழைக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

எனினும் அவர்களது உடல் நிலை ஒத்துழைக்கும் அளவினை விடவும் அதிகமாக பணியாற்றும்போது உடல் அளவிலும், மனதளவிலும் பாரிய அழுத்தம் ஏற்படுகின்றது.

இதற்காக சர்வதேச அளவில் ஒருவரிடம் வாரத்திற்கு அதிக பட்சம் 48 மணி நேரம் தான் வேலை வாங்க முடியும் என சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

இருந்தும் இது கூட தனிநபர் ஒருவரின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது இல்லை என ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கின்றது.

அதாவது அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் இறுதியிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிக பட்சமாக வாரத்திற்கு 39 மணி நேரம் பணியாற்றினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 24 வயதான ஜப்பானி பெண் ஒருவர் மாதம் ஒன்றிற்கு 105 மணி நேரம் மேலதிக பணி புரிந்ததனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

இந்த விடயம் சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளாகியிருந்தது.

இதன் பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிக நேரம் பணிபுரிவதால் உடல் ரீதியான சோர்வும், மன ரீதியான அழுத்தமும் ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE