வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (12.03.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வட்டுக்கோட்டை அராலி பகுதியைச் சேர்ந்த 37, 32,25, 22 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள் வெட்டு தாக்குதல்
சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போது நேற்று (11.03.2024) 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞன் கடத்தப்பட்டு வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.