வாழைக்குழைகளுடன் கேரளா கஞ்சாவினை கடத்திச் சென்ற நபர் ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா – மன்னார் சந்தியில் வைத்தே 30 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமையவே இந்த நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 100 கி.கிராம் கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேகநபர் இன்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.