வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் பதினான்கு மாடுகளை ஏற்றி சென்ற சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை இன்று அதிகாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் புனானை ரிதிதென்ன பகுதியில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு கொண்டுவரப்பட்ட மாடுகளையும், அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடம் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான எந்தவிதமான ஆவணங்களும் இருக்கவில்லை என வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.