தங்களது சம்பள நிலுவையை வழங்கக் கோறி கடந்த 18.09.2015ம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் 18 வது நாளாகவும் இடம் பெற்று வருவதுடன் எதிர்காலத்தில் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படா விட்டால் எதிர் வரும் தினங்களில் வீதியில் இறங்கி சம்பளம் வழங்கும் வரை போராடுவோம் என்று ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது சம்பளப் பிரச்சினை தொடர்பாக நாங்கள் கடந்த 02.10.2015ம் திகதி மாலை கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் இருந்து தொலைநகல் ஒன்று வந்துள்ளது அதில் எங்களது சம்பளம் இவ் வாரம் வழங்கப்படும் என்றும் நாங்கள் நடாத்தி வரும் போராட்டத்தினை கை விடுமாறும் அதில் கோரப்பட்டு ஆலையின் பொது முகாமையாளர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்துள்ள கடிதத்தை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்றும் எங்களது பிரச்சினை தொடர்பாக அமைச்சர் றிஸாட் பதியுதீனோ அல்லது அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகளோ எழுத்து மூலமோ அல்லது நேரடியாகவோ சொன்னால் நாங்கள் எங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றும் எங்களது தலைமைக் காரியாலயத்தில் இருந்து வரும் கடிதங்களை நாங்கள் நம்பத் தயாரில்லை என்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.