வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த வாழைப்பழ டயட்டானது, நம் உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது.
வாழைப்பழ டயட்டை பின்பற்றுவது எப்படி?
வாழைப்பழ டயட்டில், ஒரு நாளைக்கு 10-12 வாழைப்பழங்கள் மற்றும் 3 லிட்டர் தண்ணீர் ஆகிய இரண்டை மட்டுமே உணவாக 12 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
பின் இந்த டயட் முறையுடன், தினமும் உடற்பயிற்சிகளை பின்பற்றி வந்தால், உடல் எடையில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் ஒவ்வொரு நாட்களும் முக்கியமாக நம் உடம்பிற்கு தேவையான ஓய்வினை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இதர நன்மைகள்
இதனால் உடல் எடை குறைவதுடன் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
நமது சருமம் எப்போதும் மென்மையாக மற்றும் பளபளப்பாக இருப்பதுடன், கால்களின் தசைகள் வலிமையாகிறது.
குறிப்பு
வாழைப்பழ டயட்டை பின்பற்றும் போது, முக்கியமாக நாம் வழக்கமாக சாப்பிடக் கூடிய உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிடவே கூடாது.