வாழைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

212

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது.

இதனால் இவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கும் போது, செரிமான பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தடுக்கப்படும்.

வாழைப்பூவில் Polyphenol என்னும் சக்தி வாய்ந்த Antioxidant நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்களைப் பாதிக்கும் free radicals – இல் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

வாழைப்பூவில் Glycemic index குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் Antioxidant அதிகமாகவும் உள்ளதால், இவை இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கிறது.

வாழைப்பூவை உட்கொண்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்சனைக்கு நல்ல சிகிச்சையாக இருக்கும்.

உணவில் வாழைப்பூவை அதிகம் சேர்த்து வருவதன் மூலம், உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை இருப்பின் வாழைப்பூவை உணவில் சேர்த்து வாருங்கள்.

வாழைப்பூவில் உள்ள மக்னீசியம், மனக்கவலையைக் குறைத்து, மன நிலையை மேம்படுத்தும்.

ஆகவே உங்களுக்கு மனம் சரியில்லையெனில், வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு போதிய அளவில் தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்றால், வாழைப்பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

SHARE