புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு முன்னெடுப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முப்பது பயனாளிகளுக்கும் நீர் அழுத்த விசைப்பொறிகள் (நீர் இறைக்கும் இயந்திரம்) மற்றும் தையற்பொறிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில், கடந்த 01.01.2016ம் நாளன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டபத்தில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வானது நடைபெற்றுள்ளது.
பிரதேசத்தின் 19 கிராம அலுவலர் பிரிவுகளில் 50 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களில் புதுக்குடியிருப்பு வலயத்தின் 30 பயனாளிகளுக்கு குறித்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாழ்வாதார உதவிகளாக, விவசாயத்தேவைக்கான நீர் அழுத்த விசைப்பொறி (நீர் இறைக்கும் இயந்திரம்) மற்றும் தையற்பொறிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் பிரதேச செயலாளர் திரு.செல்லத்துரை பிரணவநாதன், புதுக்குடியிருப்பு பிரதேச தலைமைப்பீட வாழ்வின் எழுச்சி முகாமையாளர் திருமதி நிவேதினி-கிரிஜாகரன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி கலாவதி-விமலேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு வைப்பக வலய உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.