தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதியின் தீவிரம் குறையும்.
பூண்டில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால் கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது.
ஆப்பிள் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல் சிறப்பாகத் தன் வேலையைச் செய்யும்.
இரும்புச் சத்து நிறைந்த பசலைக்கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது.
கேரட்டில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு உடலில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கிறது.
தினமும் பீட்ரூட் சாறு அருந்தினால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேற்றிவிடும்.
தினமும் ஒரு வகை கீரை உணவில் சேர்த்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்.
தினமும் ஆப்ரிகாட், ஆப்பிள், ஆளிவிதை, ப்ளம்ஸ் சாப்பிட்டால் கேன்சர் நோய் கிட்டே வராது.
தினமும் எலுமிச்சை பழச் சாறை பருகி வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
திராட்சை உடலிலுள்ள கெட்ட நீர், கபம், வாயு, சளி, குடல் கழிவுகள், உப்புகள் ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றும்.