மரண தண்டனைக்கு எதிராக முன்னாள் கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மேன்முறையீடு செய்துள்ளார்.பம்லப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன, அவரது பதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரும் சட்டத்தரணிகளின் ஊடாக மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். 2013ம் ஆண்டில் மொஹமட் சியாம் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரும் சட்டத்தரணிகளின் ஊடாக மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். 2013ம் ஆண்டில் மொஹமட் சியாம் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிப்பிராயத்தை இணைக்க
பதிவு செய்த பாவனையாளர்கள் மட்டும் அபிப்பிராயம் இடலாம்.