எல்லஸ்ரீ சுமங்களாராம விகாரையில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் தப்பிக்க முற்பட்ட போது 40 அடி உயரமான பள்ளத்தில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறியுள்ளார்.
விகாரையிலுள்ள உண்டியல் மற்றும் பெறுமதி மிக்க பொருட்களை கொள்ளையிட முற்பட்டதாகவும் இந்த நிலையில் கைது செய்வதற்கு முற்பட்ட போது தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தப்பித்து ஓடும் போது 40 அடி உயரமான பள்ளத்தாக்கில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
இதன் போது காயமடைந்த சந்தேக நபர் தியத்தலாவ வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பண்டாரவெல பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபருக்கு தொடர்பு இருக்கலாம் என எல்ல பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்