விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரோ?

566

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். நயன்தாரா தற்போது நடித்துவரும் தர்பார் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை விக்னேஷ் சிவன் சந்தித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. அதனால் அவர் அந்த படத்தில் அனிருத் இசையில் பாடல் எழுதுகிறார் என்றும் செய்திகள் பரவியது.

ரஜினியை சந்தித்துவிட்டு நேராக இஸ்லாமிய புனித தலமான அஜ்மீர் தர்காவுக்கு விக்னேஷ் சிவன் சென்று வழிபட்டுள்ளார்.

அப்போது அவர் இஸ்லாம் முறைப்படி தலையில் தொப்பி அணிந்து உள்ளார். அந்த புகைப்படங்களையும் அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த அனைவரும் ‘விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரோ?’ என கேட்டு வருகின்றனர்.

SHARE