விக்னேஸ்வரன் தலைமையில் நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

247

நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது.

நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வாசுதேவக்குருக்கள் சைத்தன்ய சுவாமிகளின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (7)

நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் யாழ்.விருது வழங்கி கௌரவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

அதனைத்தொடர்ந்து இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் பொற்கிழி வழங்கி வைத்தார். அதன்பின்னர் வலம்புரி பத்திரிகையாசிரியர் ந.விஜயசுந்தரம் துர்க்காதேவி தேவஸ்தானத்தினருக்கு நல்லைக்குமரனின் 24வது மலரினை வழங்கி வெளியிட்டு வைத்ததுடன் இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனுக்கு சிறப்பு பிரதியையும் வழங்கி வைத்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (5)

மலர்வெளியீட்டு விழாவில் மகாதேவ ஆச்சிரம சிறுவர் சிறுமிகள்மற்றும் யாழ்.மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் சமய தொண்டர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE