விக்ரமன் வீட்டில் குவிந்த 15 மருத்துவர்கள்.. படுத்த படுக்கையாக இருக்கும் மனைவிக்கு சிகிச்சை

88

 

இயக்குனர் விக்ரமன் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர். பூவே உனக்காக, சூர்ய வம்சம், வானத்தை போல உள்ளிட்ட குடும்ப ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்களை கொடுத்தவர் அவர்.

விக்ரமன் மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு இடுப்பு வலிக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, தவறான அறுவை சிகிச்சை செய்ததால் இடுப்புக்கு கீழ் உடல் செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என முதலமைச்சருக்கு இயக்குனர் விக்ரமன் கோரிக்கை வைத்து இருந்தார்.

15 மருத்துவர்கள்..
இந்நிலையில் இன்று சுகாதார துறை அமைச்சர் மற்றும் அரசு மருத்துவர்கள் 15 பேர் இயக்குனர் விக்ரமனின் வீட்டுக்கே சென்று அவரது மனைவிக்கு பரிசோதனைகள் செய்து இருக்கின்றனர்.

அவருக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதாக மருத்துவர்கள் கூறியதாக விக்ரமன் தெரிவித்து இருக்கிறார். இதற்காக முதலமைச்சர் மற்றும் அரசுக்கு விக்ரமன் நன்றி கூறி இருக்கிறார்.

SHARE