விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவருக்கு ஹேட்டர்ஸ் என்று யாருமே இல்லை, சமீபத்தில் இவர் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் இவருடன் நிவின் பாலியும் இருந்தார், அப்போது விக்ரம் பேசுகையில் ‘நான் எப்போதும் கையில் பணம் வைத்திருக்க மாட்டேன், அருகில் இருப்பவர்களிடம் வாங்கி செலவு செய்துக்கொள்வேன், இருக்கும் போது நிறைய செலவு செய்வேன், இல்லாத போது நண்பர்களிடம் வாங்குவதில் எந்த தவறும் இல்லை.
அந்த வகையில் ஒரு நாள் நிவின் பாலியிடம் பணம் கேட்டேன், ஆனால், அவர் என்னிடமே பணம் இல்லை சார் என்று கூறினார்’ என கலகலப்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.