விஜய் ஆண்டனி நடித்த `சலீம்,’ அரவிந்தசாமி நடித்த `சதுரங்க வேட்டை-2′ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், என்.வி.நிர்மல்குமார். அடுத்து இவர், விக்ரம் பிரபுவை வைத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை, இது. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அதில் ஒருவர், பிரபல நாயகி. இன்னொருவர், புதுமுகம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இன்னொரு கதாநாயகனும் படத்தில் இருக்கிறார். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
`சென்னையில் ஒருநாள்’ படத்தின் தயாரிப்பாளர் ராம்மோகன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி, சென்னை, மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.