குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தவர் ஷாம்லி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த துர்கா படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த ஷாம்லி, நடிப்பதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது இவர் தகராறு படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். தற்போது இப்படத்திற்கு வீர சிவாஜி என பெயரிடப்பட்டுள்ளது.