முல்லைத்தீவு விசுவமடு புளியடிச்சந்தியில் தங்க நகை கடையொன்றை உடைத்து பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
மூன்று முதுரைக்கதவுகளை உடைத்து உள்நுளைந்த கொள்ளையர்கள், அயன்சேவையும் உடைத்து பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை நன்கு திட்டமிட்டு குறைந்தது 10 பேருக்கு மேல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். குறித்த இடத்திற்கு விரைந்த புதுகுடியிருப்பு பொரிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.