விசுவமடு பகுதியில் விடுதலை புலிகளின் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சந்தேகித்து அகழ்வு!

364

 

இன்று பிற்பகல் 1.30மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம்,  மூங்கிலாற்று பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை மின் வழங்கும் நோக்கில் மின் கம்பங்களை நாட்டியது

மூங்கிலாற்று பிரதானவீதி அருகில் மண்ணைத் தோண்டும் பொழுது மர்மப்பொருள் தட்டுப்படும் சத்தத்தை உணர்ந்த மின்சார சபை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பினார்கள்.

மின்சார சபை அதிகாரிகள் விசுவமடு பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததை தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த இடத்தை அகழ்ந்தனர்.

எனினும் அதற்குள் இருந்து ஆட்லரி செல்லின் வெற்றுக்கோதும் கூரைத்தகடுகளும் தான் மீட்கப்பட்டது.

 

விசுவமடு பகுதியில் விடுதலை புலிகளின் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சந்தேகித்து அகழ்வு!

விஸ்வமடு கொளுந்துப்புளவு சந்தியில் இன்று 1.30 மணியளவில்  விடுதலை புலிகளின் ஆயுதக் கிடங்கு  இருக்கலாம்  என சந்தேகித்து  அகழ்வு  நடை பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டம்,  மூங்கிலாற்று பிரதேசத்தில் இலங்கை மின்சார சபை மின் வழங்கும் நோக்கில் மின் கடந்த  மூன்று  நாட்களுக்கு முன்  கம்பங்களை நாட்டும்  வேலையை  செய்து  வந்தது.

கொளுந்துபுளவு சந்தியில் மூங்கிலாற்று பிரதானவீதி அருகில் மண்ணைத் தோண்டும் பொழுது வித்தியாசமான பொருள்  ஒன்றுடன்   தட்டப்பட்டு  வரும்  சத்தத்தை உணர்ந்த மின்சார சபை ஊழியர்கள் மேல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பினார்கள்.

மின்சார சபை அதிகாரிகள் நேற்றைய  தினம் தர்மபுரம்  பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததை தொடர்ந்து  குறித்த  இடத்தில்  விடுதலை புலிகளின்  ஆயுதக் கிடங்கு  அல்லது  விடுதலை புலிகளின்  நில பதுங்குகுழி  இருக்கலாம்  என  சந்தேகித்து  கிளிநொச்சி  நீதிமன்றின்  அனுமதியுடன்   பொலிஸ் அதிகாரிகள் மற்றும்  இராணுவத்தினர் குறித்த இடத்தை அகழ்ந்தனர்.

எனினும் அதற்குள் இருந்து ஆட்லரி செல்லின் வெற்றுக்கோதும் கூரைத்தகடுகளும் மட்டுமே  மீட்கப்பட்டன.

SHARE