விசேடதேவைக்கு உட்பட்டோருக்கான அரிசிப்பொதிகளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளும் வழங்கும் நிகழ்வு

435

கனகராயன்குளம் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு வன்னிக் குறோஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான வைத்தியகலாநிதி திரு சி.சிவமோகன்! தலமையில் நடைபெற்றது .தழிழ் ஊNN இணையதளத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரும்  வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ந.சிவசக்திஆனந்தன் வடமாகாணசபை உறப்பினர்கள். பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா விசேடதேவைக்குட்பட்டோருக்கு அரிசிப்பொதிகளும் முன்பள்ளி ஆசிரியர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கியமைக்கு வன்னிக்குறோஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன் வறுமைக் கோட்டிற்கு உட்பட்டோருக்கு இப்படியான கொடுப்பனவுகள் அவர்கட்கு மிகுந்த உவியாக இருக்கும் எனவும், தற்போது ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஓர் ஒய்வுகாலமாகவே கருதலாம் எனவே முழுமையான நன்மை கிடைக்கவேண்டுமானால் யூன் மாதம் நடைபெறும் பாராளுமன்றத்தேர்தலிலும் வடகிழக்கு மாகாணத்தில் தழிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு கூடுதலான உறுப்பினர்களைப் பெறுவதற்கு எல்லா மக்களும் ஓன்றிணைந்து கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன்மூலமே ஆட்சி மாற்றத்திலான பலனைப் பெறலாம் எனவும்; மக்கள்விடுதலை முன்னணி ஜதிககெல உறுமய போன்ற கட்சிகளும் கூடத் தழிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கவேண்டும் என கூறிவருகின்றார்கள் ஆகவே இதுஒரு சாதகமானகாலமாகும் என்றார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் போர்ஏற்பட்டகாலத்தில் தமது உயிரைத்தியாகம் செய்து பல இன்னல்களுக்கு மத்தியில் எமது வன்னிப்பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்காக எத்தனையோ இடையூறுகளையும் தாண்டி அயராது பாடுபட்டு கடமையாற்றிய நெடுங்கேணி வடக்கு வலய அதிபர்களை அவர்களின் உன்னத சேவையினைக் கருத்தில் கொள்ளாது அவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றங்களைச் செய்தது அவர்கள் மனதை புண்படுத்தியசெயலாகும் இந்த விருப்பமற்ற இடமாற்றத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் எத்தேர்தலாக இருந்தாலும் வன்னி நிலப்பரப்பில் இருக்கின்றமக்கள் தழிழத்; தேசியக்கூட்டமைப்பிற்கே வாக்ளிப்பார்கள் இந்த மாகாணசபைத்தேர்தலிலும் முழுமையாக தமது நெரத்தையும் பொருட்படுத்தாது எமது வெற்றிக்காக பாடுபட்டவர்கள். அவர்களே எனவும் அப்படிப்பட்ட அதிபர்களுக்கு இப்படியான ஒருசெயற்பாட்டைச் செய்வது எந்தவகையிலும் நியாயமற்றது எனவும் இந்த அதிபர்கள் பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது எனக்கூறினார். இவ்விடயத்தை நான் எமது பகுதி சுகாதார அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கத்துடனும் எனது சக மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ க.தா.லிங்கநாதன், கௌரவ இ.இந்திரராசா அவர்களுடனும் தொடர்பு கொண்டு கௌரவ கல்விஅமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவேன் என்றார்.

நன்றி
மயில்வாகனம் தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்
unnamed (2)   unnamed

SHARE