விசேட அதிரடிப்படையின் 664 அதிகாரிகள் பதவி உயர்வு

116
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 664 அதிகாரிகள் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதன்படி, விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக மூவரும், உதவி பொலிஸ் பரிசோதகர் பதவியிலிருந்து பொலிஸ் பரிசோதகர்களாக 41 பேரும், பொலிஸ் சார்ஜென்ட் பதவியில் இருந்து உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 111 பேரும், பொலிஸ் சார்ஜென்ட் சாரதி பதவியிலிருந்து உதவி பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு 08 பேரும், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜன்ட் சாரதி பதவிக்கு 06 பேரும், பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பொலிஸ் சார்ஜென்ட் பதவிக்கு 495 பேரும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். – ada derana

SHARE