விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு!

268

வவுனியா, வள்ளிகோட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி அயல் வீட்டாருடன் பழைய டயர்களை கொள்வனவு செய்வதற்காக வாகனமொன்றில் சென்ற இச் சிறுவனை 11.30 மணியளவில், முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்து ஒன்றில் குறித்த சிறுவனை கூட்டிச்சென்றவர்கள் ஏற்றி விட்டதாகவும் எனினும் சிறுவன் வவுனியா நகரை வந்தடையவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கோமரசன்குளம் பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சிறுவன் தாய், தந்தை அற்ற நிலையில் தமது அம்மம்மாவுடன் தங்கி கற்று வந்ததாக உறவினர்கள் தெரிவிப்பதுடன், இது தொடர்பாக வவுனியா பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந் நிலையில் இச் சிறுவனை கண்டவர்கள் 0772923135, 0778923272 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு துண்டுப்பிரசுரமும் வவுனியா நகரில் வழங்கப்பட்டுள்ளது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE