விச ஊசி விவகாரம்! இரு தினங்களில் 73 போராளிகள் மருத்துவ பரிசோதனை!

194

injection

விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இரு தினங்களில் 73 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

விச ஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த 2ம் திகதி வெள்ளிக்கிழமை மற்றும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.

அதில் யாழ் மாவட்டத்தில் 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 16 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 29 பேரும், வவுனியா மாவட்டத்தில் 05 பேரும், மன்னார் மாவட்டத்தில் 04 பேருமாக 73 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் 2ம் திகதி 26 பேரும், 9ம் திகதி 47 பேரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், எதிர்வரும் 15ம் திகதி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு முல்லைத்தீவு வைத்தியசாலையிலும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மன்னார் வைத்தியசாலையிலும் பிற்பகல் 1 மணிக்கு வவுனியா மற்றும் பிற்பகல் 4 மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலைகளிலும் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில், வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE