விஜயதாஸ ராஜபக்ஷ VS சரத் பொன்சேகா: மானநஸ்ட வழக்கு வழக்கு தொடர முடிவு –

278

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா நேற்று தெரிவித்திருந்தார்.

பொன்சேகாவின் இந்தக் கூற்று தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகளின் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவன்காட் சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்யுமாறு சரத் பொன்சேகா தன்னை வற்புறுத்தி வருவதாகவும், அவ்வாறு கைது செய்யாமையின் காரணமாகவே தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

போதிய ஆதாரங்கள் இன்றி எவரையும் கைது செய்ய முடியாதென்றும் எவன்காட் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தான் தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜயந்த கெட்டகொடவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்ள உதவி புரியாமை மற்றும் அவருக்கு வேண்டாதவர்களை கைது செய்யாமை போன்ற காரணங்களுக்காவே தன்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பதவிகள் கிடைத்தவுடன் பழையவற்றை சரத் பொன்சேகா மறந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE