விஜய்க்காக விட்டுக்கொடுத்த டைட்டில்! மீண்டும் கையிலெடுத்த லாரன்ஸ்

166

ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா3 படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். அந்த படத்தில் ஓவியா,வேதிகா உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

அடுத்து பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள புதிய கதையில் லாரன்ஸ் நடிப்பார் என முன்பே செய்தி வந்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு காலபைரவா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்த படத்திற்கு பைரவா என தலைப்பு வைத்தபோது அந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்த ராகவா லாரன்ஸ் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE