விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா.

141

தமிழில் சங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. பாலிவுட் சினிமாவின் பிரபலமான இவர் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் தான் இருப்பார்.

அவரை பற்றி வதந்திகள் வந்த வண்ணம் இருக்கும். அவரும் சலிக்காமல் அதற்கு விளக்கம் கொடுத்து வருவார். அண்மையில் அவர் கர்ப்பமாக இருக்கிறார், சினிமாவை விட்டு விலகிவிட்டார் என கூட தகவல்கள் பரவியது.

இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளாராம். அவர் வெளியிட்டு செய்தியில் என் மீதான ஆதாரமற்ற வதந்திகள் எனது எதிர்காலத்தை பாழாக்கவே செய்யப்படுகிறது.

உண்மையில் நான் நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்காக காத்திருக்கிறேன். ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தபோது, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதால் அதை நான் மறுத்துவிட்டேன்..

தொடர் புரளிகள் எனக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கூறியிருக்கிறார்.

SHARE