விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அதுவும் திருவிழா நாட்களில் இவரது படங்கள் வரும் போது ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு ஒரு எல்லையே இருக்காது. அப்படி சில படங்களின் ரிலீஸின் போது ரசிகர்களின் ஆட்டத்தை பார்த்து பலர் மிரண்டிருக்கிறார்.
சமீப காலமாக விஜய்யின் முந்தைய பேட்டிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்படி ஒரு முறை சின்ன குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர்கள் கேட்கும் சுட்டி கேள்விகளுக்கு அழகாக பதில் கூறியுள்ளார்.
ஒரு சிறுவன் நீங்கள் படிக்கும் போது உங்களுக்கு மிகவும் பிடித்த பாடம் எது என்று கேட்கிறார், அதற்கு விஜய் எனக்கு Geography மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார்.