
விஜய், சூர்யா இருவரும் நல்ல நண்பர்கள் தான். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் களத்தில் இறங்க தானே வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் எப்படி விஜய்-அஜித் என போட்டி இருக்குமோ, அதேபோல் கேரளாவில் விஜய்-சூர்யாவிற்கு தான் கடும் போட்டி.
இந்நிலையில் தெறி கேரளாவில் ரூ 16 கோடி வசூல் செய்ய, 24 ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது இவர்களின் அடுத்த படத்தின் கேரளா வியாபாரம் முடிந்து விட்டது.
இந்த முறை விஜய்யின் படத்திற்கு தான் செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது, கிட்டத்தட்ட ரூ 6 கோடிகளுக்கு மேல் விஜய்-60யை வாங்கியுள்ளார்கள், இதை நாமே தெரிவித்திருந்தோம்.
சிங்கம்-3 ரூ 4 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது, ஆனால், வேலாயும், 7ம் அறிவு வந்த நேரத்தில் சூர்யா படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.