விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் கார் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அதனால் அவருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால் உண்மையில் அவர் கார் விபத்தில் சிக்கவில்லை. கேரளாவில் தான் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார்.
இதனால் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது குணமடைந்திருப்பதாகவும், இன்று சென்னை திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.