விஜய்யின் செய்கையால் கோபமான விஜய் சேதுபதி!

223

விஜய் சேதுபதியை அனைவருக்கு பிடித்துவிட்டது என்று சொல்லலாம். அவரின் படங்கள் வயது பாரபட்சமின்றி பலருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இவருக்கு கையில் பல படங்கள். வருடத்திற்கு 6 க்கும் அதிகமான படங்கள் என்றால் கூட அசால்ட்டாக நடித்து முடித்துவிடுவார். ஆனால் தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.

இந்த மனுஷன் எப்படி தான் சும்மா இருப்பாரோ என்பது ரசிகர்களின் எண்ணம். அண்மையில் அவர் நடிக்கும் ஜுங்கா படத்தின் சில நிறைவு காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது.

ஸ்டிரைக் தடையிருக்கும் போது ஷூட்டிங் எடுக்கப்பட்டது சர்ச்சையானது. அதற்கு படக்குழு சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஆனால் விசயம் என்னவெனில் ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்டிரைக்குக்காக ஒத்துழைப்பு அளித்திருக்கும் வேளையில் தடையை மீறி விஜய் 62 படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது தானாம்.

மேலும் இயக்குனர் முருகதாஸ் விஜய் 62 படத்தை ஸ்பெஷல் அனுமதியுடன் படம் எடுத்திருக்கிறார். விஜய்யும் இந்த விசயத்தில் மௌனம் காத்தது தானாம். ஏற்கனவே துப்பாக்கி படத்தின் போதும் ஸ்டிரைக் தான்.

அப்போதும் இதே போல தான் முருகதாஸ் செய்தாராம்.

SHARE