அஜித் 4வது முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக ஒரு தரப்பு கூறுகிறது, ஆனால் மற்றொரு பக்கம் வரும் பிப்ரவரி 22ம் தேதி என்றும் மற்றொரு தரப்பு தெரிவிக்கின்றனர். அண்மையில் படத்தின் நாயகியாக நயன்தாராவும், இசையமைப்பாளராக டி.இமான் இணைந்திருப்பதாக வந்த தகவலின் சந்தோஷத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்த நிலையில் விஜய்யை வைத்து போக்கிரி என்ற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய பிரபுதேவா, அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவரும் அடிக்கடி சந்திப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசுவாசம் பட வேலைகள் முடியும் முன்னரே அஜித்-பிரபுதேவா கூட்டணி குறித்த தகவல் வெளியாகலாம் என்கிற பேச்சு அடிபடுகிறது.