
சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் தவறு நடக்கிறது என்று தெரிந்தால் தைரியமாக முதல் ஆளாக எதிர்ப்பவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் அண்மையில் சினிமா படங்கள் குறித்தும், சில அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது விஜய்யின் மெர்சல் பட பிரச்சனைகள் ஒரு வேளை நீங்கள் நடித்த சமூக பிரச்சனை மையமாக கொண்ட படங்கள் ரிலீஸில் தடங்களை சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸ் ஆகும், அப்படி ரிலீஸ் ஆகவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவேன்.
மெர்சல் படத்தை இப்போது வரை பார்க்கவில்லை அதனால் அதை பற்றி பேச முடியாது. பார்த்தால் படத்தை பற்றி பேசலாம். முதலில் என்னுடைய படத்தையே அவ்வளவாக பார்க்க மாட்டேன், நீங்கள் மற்றவர்கள் படத்தை பற்றி கேட்கிறீர்கள் என கூறியுள்ளார்.