நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடிப்பில் தயாராகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்திற்கான புரொமோஷன் படு சூடாக நடந்து வருகிறது, டிரைலர் மற்றும் பாடல்களும் ரசிகர்களிடம் பிரபலமாகிறது.
டிரைலர் அதிக பார்வையாளர்களையும், லைக்ஸ்களையும் பெற்று நிறைய சாதனைகள் செய்துள்ளது.
அஜித் ரசிகர்கள்
விரைவில் விஜய்யின் லியோ படம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் அப்படம் வெற்றியடைய வேண்டும் என போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.
அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் நல்ல பன்பு இப்படி ஆரோக்கியமாக ரசிகர்கள் செய்தால் நன்றாக இருக்கும் என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.