விஜய்யின் லியோ பட வெற்றிவிழாவிற்கு வராமல் நடிகரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் எங்கே சென்றுள்ளார் தெரியுமா?

107

 

லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குனராக சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர்.

மாநகரம், கைதி போன்ற படங்களால் முன்னணி இயக்குனர் தகுதிக்கு உயர்ந்த இவர் மீது தளபதி பார்வை பட இருவரும் மாஸ்டர் படம் மூலம் முதலில் இணைந்தார்கள். இரண்டாவது முறையாக இணைந்து லியோ என்ற படத்தை கொடுத்துள்ளனர்.

ரூ. 250 முதல் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 12 நாள் முடிவில் ரூ. 500 கோடிக்கு மேல் வசூவித்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகமாகும் என்கின்றனர்.

வெற்றிவிழா
படம் செம வசூல் வேட்டை நடத்த படக்குழு வெற்றிவிழா கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். இன்று நவம்பர் 1, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 6000 பேர் கலந்துகொள்ள நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

விஜய்யின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இன்றும் வருவார் என பார்த்தால் அவர் இன்று காலை ஸ்ரீரடி செல்வதாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

SHARE