விஜய்யின் 61வது பட பெயர் இதுதானா- படக்குழு அதிர்ச்சியான விளக்கம்

257

 

விஜய் 61 பட வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. அட்லீ இயக்கும் இப்படம் கண்டிப்பாக மிகவும் கிளாஸாக இருக்கும் என்பது ரசிகர்கள் எண்ணம்.

அதிலும் மூன்று முன்னணி நாயகிகள், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு என பல திறமையான நடிகர்கள் என ரசிகர்கள் படத்தை அதிகம் எதிர்ப்பார்க்க காரணம் ஆயிரம். இன்னும் படத்தின் வேலைகள் முடியாத நிலையில், படத்தின் பெயர் மூன்றமுகம் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகி வந்தன.

அதேநேரத்தில் நேற்று (ஏப்ரல்1) படத்தின் பெயர் மூன்றுமுகம் என்று சொல்லி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் படக்குழு தரப்போ, தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இணையத்தில் வெளியாகியிருப்பது ரசிகர் ஒருவர் வடிவமைத்தது. அதற்கும் படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

SHARE