விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்- இளம் நடிகரின் விருப்பம்

503

இளைய தளபதியுடன் பலரும் நடிக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். அந்த வகையில் இளம் நடிகர் ஸ்ரீகுமார் நம் சினி உலகத்திற்கு அளித்த பேட்டியில் தற்போதுள்ள நடிகர்களில் யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம்.

அதற்கு ஸ்ரீ ‘எனக்கு இளைய தளபதி விஜய்யை மிகவும் பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும், இவர் பிரபல இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் ஜோடியில்கணேஷ் அவர்களின் வாரிசு. பொதுவாகவே இசையமைப்பாளர் வாரிசுகள் இசையமைப்பாளர்களாக தான் வருவார்கள். ஆனால் இவர் நடிப்பு தான் எனது லட்சியம், இசைக்கு அதிகம் ஞானம் தேவை என்று நடிப்பில் கவனம் செலுத்துகிறார். தற்போது முருகதாஸ் தயாரிப்பில்கௌதம் கார்த்திக் நடிக்கும் ரங்கூன் படத்தில் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை அவர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்

 

SHARE