கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்த நடிகை அமலா பால் தன் மனதிற்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம். இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது அவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அமலா பாலை பிரிந்த பிறகு விஜய் தேவி படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். அமலா தனது வட சென்னை படத்தில் பிசியாக உள்ளார்.
விளம்பரம்
சந்திரிகா சோப்பு விளம்பரம் தொடர்பாக அமலா பால் மும்பை சென்று வந்ததை புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தோழி
அமலா தனது தோழிகளுடன் நேரம் செலவிடுகிறார். அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்
சென்னை ராக்கர்ஸ்
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளில் விளையாடும் சென்னை ராக்கர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் அமலா பால்.
காஷ்மீர்
அமலா பால் காஷ்மீருக்கு சென்று வந்துள்ளார். காஷ்மீரின் அழகில் மயங்கிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பூமியில் உள்ள சொர்க்கம் காஷ்மீர் என்கிறார் அமலா.