விஜய் எல்லா இளம் நடிகர்களும் கூட நடிக்க ஆசைப்படும் ஒரு பிரபலம். தன்னால் முடிந்த அளவிற்கு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்.
இப்போது அனைவரின் எதிர்ப்பார்ப்பும் இவரின் 63வது படத்தின் மேல் தான் உள்ளது. படத்திற்கான வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது. ஒரு பேட்டியில் காமெடியன் கருணாகரன், விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் நான் விஜய்யுடன் புலி, நண்பன் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது சில பட வேலைகளால் தவறவிட்டுவிட்டேன். ஒருமுறை விஜய் அவர்களை சந்தித்த போது இதுகுறித்து அவரிடம் கூற, கண்டிப்பாக பண்ணலாம் நண்பா என்றார்.
நான் கண்டிப்பாக விஜய்யுடன் நடிக்க வேண்டும், ஆசையாக இருக்கிறது என்று கருணாகரன் பேசியுள்ளார்.
இவர் விஜய்யை விமர்சித்ததால் தளபதி ரசிகர்களுடன் பெரிய பிரச்சனையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.