விஜய், அஜித் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்கள் படங்கள் எல்லாம் தற்போது தோல்வியடைந்தால் கூட ஓரளவிற்கு வசூலை தந்துவிடுகின்றது.
ஆனால், இவர்கள் இருவரும் ஓரளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்தவுடன் சந்தித்த மிகப்பெரும் தோல்விகள் எது தெரியுமா? இதோ..
அஜித்
அஜித் 2000-லிருந்து 2011 வரை மிகவும் போராடி வந்தார், ஒரு படம் ஹிட் என்றால் இரண்டு படம் தோல்வி, இப்படி தான் இவரின் சினிமா கிராஃப் சென்றது, ஆனால், அஜித் தொடர்ச்சியாக தோல்வியை கொடுத்தது 1997-ல் தான், அந்த வருடம் அவர் நடித்த நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜாடை வயசு என தொடர்ந்து 4 படங்கள் ப்ளாப் கொடுத்தார். இந்த தோல்விகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை 250 நாட்கள் ஓடி, தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
விஜய்
விஜய்யை பொறுத்தவரை ஒரு தோல்வி கொடுத்தால் கூட அடுத்து பிரமாண்ட வெற்றியை தான் தருவார், ஆனால், இவரின் கஷட காலம் 2007லிருந்து 2010 வரை நீடித்தது, இந்த காலங்களில் இவர் நடித்த அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து 5 படங்கள் ப்ளாப் கொடுத்தார். இந்த படங்களுக்கு முன் வந்த போக்கிரி விஜய்யின் திரைப்பயணத்தில் மாபெரும் வசூப்