சென்னை 60028, தமிழ் படம், கலகலப்பு போன்ற வெற்றி படங்களில் தான் நடிப்பால் நம்மை கவர்ந்த நடிகர் மிர்ச்சி சிவா அடுத்த மசாலா படத்துக்காக அளித்த சிறப்பு பேட்டி உங்களுக்காக.
1.மசாலா படத்தில் உங்களது கதாபாத்திரம் என்ன ?
இந்த படத்துல சராசரி சாதாரண மனிதனாக நடித்துளேன். சினிமா வில் ஏ ,பி, சி சென்டர் இருக்கும் அதில் பி சென்டர் சேர்ந்த மிடில் கிளாஸ் பையனாக நடித்திருக்கேன். படம் பார்த்துட்டு எல்லாரும் வேறு மாதிரி செய்து இருக்கிறீங்கனு சொல்லி பாராட்டுங்க
2.இந்த படத்தில் வசனத்தில் ஏதேனும் பங்கு கொண்டீர்களா ?
நடிக்கிற எல்லா படத்திலும் கொஞ்சமா என்னுடைய பங்கு இருக்கும். எப்போதுமே காலையில் படத்தின் படபிடிப்புக்கு சென்றுவுடன் எனக்கு என்ன வசனம் என்று கேட்டு வாங்கி கொண்டு அதை இன்னும் மெருகேற்றவேன். இந்த படத்திலும் அப்படி தான், இயக்குனர் லக்ஷ்மன் எனக்கு நண்பர் என்பதால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இருந்தாலும் கதையோட சில விஷயங்கள் இருந்தலால் சில விஷயங்களில் என்னையே நான் மாற்ற வேண்டி இருந்தது. வெங்கட் பிரபு தொடங்கி என்னுடைய எல்லா பட இயக்குனரும் சுதந்திரம் கொடுத்துள்ளனர்.
3.மூன்று ஹீரோக்கள் படங்களில் நடிக்க எப்படி சம்மதம் தெரிவித்தீ்ர்கள்?
முக்கியமான விஷயம் எல்லா இடத்திலும் சொல்ற மாதிரி இயக்குனர் லக்ஷ்மன் என்னுடைய நண்பன். அவர் கதை சொன்ன நேரத்தில் எனக்கு இந்த படம் பண்ணனும் தோணிச்சு. ஏனென்றால் புது விஷயத்தை முயற்சி செய்கிறார். அதில் நானும் ஒரு பங்கா இருக்குனும் நெனச்சேன். 3 ஹீரோக்கள் தாண்டி என்னுடைய கதாபாத்திரம் வலுவாக இருக்கா என்று தான் பார்ப்பேன் படம் பார்த்த எல்லாரும் வேற மாதிரி இருக்குனு சொல்றாங்க.
4. இந்த படத்தில் உங்களது ஜோடி பற்றி? உங்களுக்கு ரொமான்ஸ் உள்ளதா?
சாதாரண மனிதன் வாழ்கையில் ஒரு பொண்ணு நுழைஞ்சா என்ன மாதிரியான வாழ்கை நமக்கு மாறும். அது தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.
5. தமிழ் படம் இரண்டாம் பாகம் வருமா?
பார்ட் 2 வருமா கேட்கறிங்க, கண்டிப்பா பண்ணலாம், சென்னை 600028 பார்ட் 2 கேட்கறீங்க, கலகலப்பு பார்ட் 2 கேட்கறீங்க, நேரம் அமைந்தால் தமிழ் படம் பார்ட் 2 வரும்.
6. இப்படத்தில் உங்களது நடனம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா?
அது என்னமோ தெரியல பிரபு தேவா மாஸ்டருக்கு பிறகு என்னைத்தான் அடிக்கடி ஸ்டேஜ் நடனத்துக்கு கூப்பிடறாங்க. பிரபு தேவா மாஸ்டர் இந்த பேட்டியே பார்த்தா மன்னிச்சிக்குங்க. டான்ஸ் ஒரு வரம் தான் அது எனக்கு அமைஞ்சதுல சந்தோசம் தான்.
7. 144 படம் எவ்வாறு வந்துள்ளது?
அடுத்த சி.வி.குமார் தயாரிப்பில் 144 என்ற படத்தில் நடித்துளேன். படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது, இன்னும் 5 நாள் மட்டும் பாக்கியுள்ளது. மணிகண்டன் என்ற புது இயக்குனர் இயக்கியுள்ளார், ஒரு பக்கா கமர்ஷியல் படமா வந்திருக்கு.
8. மற்ற நடிகர்களான பாபி சிம்ஹா மற்றும் கௌரவ் பற்றி சொல்லுங்க?
இந்த படத்துல மற்ற நடிகர்கள் கூட எனக்கு காம்பினேஷன் சீன் எதுமே இல்லை, படம் பார்த்தா உங்களுக்கே புரியும்.
9.பிரபலம் ஆன பிறகு சந்தித்த சிரமங்கள்?
பிரபலம் ஆனா பிறகு கவலையான விஷயம் என்னவென்றால் வெளியே புகைப்படம் எடுப்பது. சும்மா டீகடையில் டீ குடித்தால் கூட வீடியோவா எடுத்து போட்டுறாங்க, அதில் பல கமெண்ட் வேற. அதனால் வீட்ல இருக்கிறதே பெஸ்ட்னு தோணுது, இருந்தாலும் நான் சாதாரண மனிதனா இருக்கும் போது பல விஷயங்களை செய்து இருக்கிறேன். அது தான் இப்போ ஸ்க்ரீன்ல வருகிறது, பல நண்பர்கள் படம் பார்த்த பிறகு அப்போ செய்ததை இப்போ ஸ்க்ரீன் செஞ்சி இருக்கேனு சொல்வாங்க.
10. இணையத்தள விமர்சகர்களுக்கு இந்த படம் பதிலடியா அமையுமா?
இப்போ விமர்சனம் செய்யறவங்க யாருன்னு பார்க்கணும், பொதுவா ஒரு raw Concert இருக்கு. அந்த Concert பற்றி தெரியாம பேசுறவங்க தான் அதிகம். உண்மையில் அது தெரிஞ்சு பேசுனாங்க நா அது நல்ல இருக்கும். இது மாதிரி யான ஒரு விமர்சகருக்கு தான் ஒரு சவால் வருது. அது எப்படி எதிர்கொள்றாங்க என்பது தான் இந்த படம்
10. விஜய் அஜித் ரசிகர்களின் சண்டை பற்றி ?
இது பற்றி கருத்தே இல்லை, இரண்டு தனிப்பட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டை போட்டால் அது எந்த அளவு படத்துக்கு பாதிப்பு வரும் என்று ரசிகர்கள் யோசிக்கணும். இன்னொரு விஷயம் ஒரு படம் நல்லா இருந்தா, யார் கலாய்த்தாலும் படம் ஓடும். படம் நல்ல இல்லனா என்ன செய்தாலும் படம் ஓடாது.
11. சீரீயஸ் கதாபத்திரத்தில் எப்பொழுது பார்க்கலாம் ?
எனக்கு பண்ணனும் ஆசை தான், நீங்க தயாரித்தால் நான் சீரியஸா நடிக்க ரெடி தான். ஆனால் எல்லோரும் தமிழ் படம் மாதிரி தான் பண்றீங்கனா நானும் ரெடி.
இந்த வாரம் ரிலீஸ் ஆகியுள்ள மசாலா படத்தை குடும்பத்தோட பாருங்க, சினிமாவை வாழவையுங்க.