இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ட்விட்டர் விமர்சனம்
தற்போது ரத்தம் படத்தை பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை நாம் இப்போது பார்க்கலாம் வாங்க
கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள உள்ள ரத்தம் படத்தில் பெரும்பாலான சூழ்நிலைகள், திருப்பங்களும் கணிக்க முடியாதவை.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடக்கும் சம்பவங்களையே இயக்குனர் அமுதன் படத்தில் வைத்துள்ளதால் குற்றங்கள் மிகவும் தொடர்பு படுத்த முடிகிறது.
படத்தில் விஜய் ஆண்டனி அருமையாக நடித்துள்ளார். அவர் நடித்திருந்த ரோல் அவருக்கு செட் ஆகிவிட்டது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.