விஜய் எடுத்த அதிரடி, பலன் கிடைக்குமா?

307

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இவர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை.

அப்படியிருக்க இன்று இப்படம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளிவந்துள்ளது, நாம் ஏற்கனவே கூறியது போல் ரகுமானை இப்படத்தில் இசையமைப்பாளராக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

இதை தொடர்ந்து இப்படம் கடந்த சில வருடங்களில் விஜய் நடித்த படங்களிலேயே மிகவும் குறுகிய நாட்களில் எடுக்கப்போகும் படமாக இருக்குமாம்.

பலரும் இப்படம் தீபாவளிக்கு வருமா? என்று எதிர்ப்பார்க்க, படத்தை அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமே முடித்து பூஜை விடுமுறை கொண்டு வர ப்ளான் செய்துள்ளார்களாம்.

மேலும், விஜய் படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலையில் இத்தனை கோடி பட்ஜெட் படம் குறுகிய நாட்களில் எடுக்க முடியுமா? என்பது தான் எல்லோரின் கேள்வியும், பார்ப்போம்

SHARE