விஜய் என்ன செய்கிறாரோ அதை தான் செய்வேன்- தனுஷ்

373

இளைய தளபதி விஜய் எப்போதும் இளம் நடிகர்களுடன் நல்ல நட்பில் இருப்பார். அந்த வகையில் தனுஷை தனக்கு மிகவும் பிடிக்கும், அவரை போல் என்னால் கூட நடிக்க முடியாது என மேடையிலேயே கூறினார்.

இந்நிலையில் புலி படத்தை முடித்த கையோடு அடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ராதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதேபோல் தனுஷ், வேல்ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் சமந்தா, எமி ஜாக்ஸன் தான் ஹீரோயின். ராதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தானாக அமைந்ததா, விஜய்யை பார்த்து தனுஷ் முடிவு செய்தாரா என்று தெரியவில்லை.

SHARE