விஜய் சாதனையை முறியடித்த அஜித்- எப்படி தெரியுமா?

246

விஜய், அஜித் படங்கள் என்றாலே தமிழ்நாட்டில் ஒரு வலுவான போட்டி இருக்கும் ரசிகர்களிடம். அதேபோல் தான் தெலுங்கு சினிமாவிலும்.

சிரஞ்சீவி, பவன் கல்யாண் படங்கள் என்றாலே திருவிழா கோலம் தான். அண்மையில் விஜய்யின் கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி கைதி எண். 150 என்ற பெயரில் நடித்தார். அமோக வசூல் செய்த இப்படம் முதல் நாளில் ரூ. 47 கோடி வரை வசூலித்திருந்தது.

அதேபோல் அஜித்தின் வீரம் பட ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருந்த கட்டமராயுடு படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 55 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இதனாலேயே தெலுங்கில் விஜய்யின் கத்தி பட சாதனையை அஜித் படம் முறியடித்துள்ளது என்று கூறப்படுகிறது.

SHARE