அஜித்தின் ரசிகர்கள் பல நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, தமிழ் நாட்டில் அவர் முன்னணி என்றாலும், வெளிமாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, கேரளாவில் விஜய், சூர்யா ஆட்சி தான்.
இவர் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் தான் இவருக்கு கேரளா, ஆந்திராவில் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
ஆனால், எப்போதும் தமிழ் நடிகர்களில் ஆந்திரா என்றால் சூர்யா, கேரளா என்றால் விஜய் தான் மிகப்பிரபலம். அப்படியிருக்க சமீபத்தில் வந்த கருத்துக்கணிப்பில் கர்நாடகாவில் என்னை அறிந்தால் மற்றும் அஜித் பற்றியான தேடல் தான் கடந்த வருடம் அதிகமாக இருந்ததாம்.
இதனால், இவர் விஜய், சூர்யா போலவே தனக்கென்று ஒரு ஏரியாவை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளாராம்.