
அனுஷ்கா, விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கிலும் நடிக்கிறார். மேலும் தேவர்மகன் படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி கமலுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
