விஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி சினிமாவிற்கு வருவதற்கே முக்கிய காரணம் குறும்படங்கள் தான்.
அந்த குறும்படம் நடித்ததிலிருந்து தற்போது கருப்பன் வரை நல்ல நண்பர்களாக இருப்பவர்கள் பாபி சிம்ஹா. இவரின் நடிப்பு கருப்பனில் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாபி சிம்ஹா சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நானும் விஜய் சேதுபதியும் பல வருடங்களாக நண்பர்கள், விஜய் சேதுபதி என்னிடம் நிறைய கதை கூறியுள்ளார்.
மேலும், அந்த படத்தில் நீ தான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார், கண்டிப்பாக அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும்’ என்று பாபி கூறியுள்ளார்.