விஜய் சேதுபதி எடுத்த முடிவு, கோபத்தில் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா

106

 

ஒரு பக்கம் ஹீரோ, மறுபக்கம் வில்லன் என பட்டையை கிளப்பி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றிபெற்ற திரைப்படம் என்றால் அது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான்.

இதன்பின், விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த எந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால், வில்லனாக அசத்தும் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்து வெற்றியடைந்த ஜவான் படத்திலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.

கோபத்தில் ரசிகர்கள்
இந்நிலையில், விஜய் சேதுபதி தற்போது எடுத்துள்ள ஒரு முடிவால் அவருடைய ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் டி எஸ் பி. இப்படத்தை பொன்ராம் இயக்கி இருந்தார். ஆனால், இந்த டி எஸ் பி திரைப்படம் படுதோல்வியடைந்தது.

இப்படியொரு நிலையில், மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை கேள்விப்பட்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கோபத்தை காட்டி வருகிறார்கள்.

இவர் இயக்கத்தில் இதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE